உலகம் போற்றும் தமிழோடு கலப்போம் உயிருக்குப்பின்னும் தமிழாய் நிலைப்போம்!

வாய்மையின் மொழி

Latest Posts

26 December 2011

பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்!

Vikram again Bollywood film!
Add caption
ராவண் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார். மலையாள இயக்குநரின் பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்! விக்ரம் முதல் முதலாக நடித்த இந்திப் படம் ராவண். மணிரத்னம் இயக்கி படுதோல்வியைச் சந்தித்த படம் இது. ஆனாலும் படத்தில் ஹீரோ அபிஷேக் பச்சனை விட, ராவணாக நடித்த விக்ரமுக்கு ஏக பாராட்டுகள் குவிந்தன. இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்கு டேவிட் என பெயர் வைத்துள்ளனர்.மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த பிஜாய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து விக்ரம் கூறுகையில், "பிஜாய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பது உண்மைதான். 2012-ல் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராவண் படம் பண்ண போதே, பிஜாயுடன் எனக்கு நெருங்கிய பழக்கம்," என்றார். இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தை ஏற்கெனவே இயக்கியவர் இந்த பிஜாய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. 

read more...

முதல் புதினம்... முதல் விருது!

சாகித்ய அகடமி விருதை இளம் வயதில் வாங்கி சாதனை படைத்திருக்கிறார் சு.வெங்கடேசன்! இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, தமிழ் மொழிக்காக இவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தொகுத்து, 'காவல் கோட்டம்’ என்ற தலைப்பில் எழுதி இருந்த, தன்னுடைய முதல் புதினத்துக்கே சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள வெங்கடேசன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் செயல் பட்டு வருபவர்.
இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கும் வெங்க டேசன் இதுவரை, 'ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’, 'திசையெல்லாம் சூரியன்’, 'பாசி வெளிச்சத்தில்’, 'ஆதி புதிர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் 'கலாசாரத்தின் அரசியல்’, 'ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை’, 'கருப்பு கேட்கிறான் கெடா எங்கே?’ போன்ற சில ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். 'காவல் கோட்டம்’ புதினத்தில், மதுரையை ஆட்சி செய்த நாய்க்க மன்னர்களின் வரலாறு மற்றும் மதுரையில் காவல் பணி புரிந்த கள்ளர் இனத்தவர்களின் வரலாறு ஆகிய இரண்டையும் எளிய நடையில் கூறி இருக்கிறார்.
வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருந்த வெங்கடேசனிடம் பேசினோம். ''என் முதல் நாவலுக்கே அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த படைப்புகளை ஆய்வு செய்துதான் விருதுக்குத் தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த வகையில் தான், 2008-ம் ஆண்டு வெளிவந்த 'காவல் கோட்டம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைச் சொல்லும் இந்த நாவலுக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் உழைத் தேன். அதற்கான பரிசுதான் இப்போது கிடைத்து இருக்கிறது. இந்த நாவலில் 24 பக்கம் கொண்ட ஒரு சிறுகதைதான் வசந்தபாலன் இயக்கும் 'அரவான்’ திரைப்படம். இந்தப் புதினம் வெளிவந்தபோது வரலாறு முழுமையாகச் சொல்லப்படவில்லை என்ற விமர்சனமும் வந்தது. நாவலைப் பற்றிய விமர்சனம் என்ற போர்வையில், தனிநபர் மீதான விமர்சனம் தான் செய்யப்பட்டு இருந்தது. அதற்கும் இப்போது காலம் பதில் சொல்லி இருக்கிறது'' என்றார்.
வாழ்த்துக்கள்!
எஸ்.கோபாலகிருஷ்ணன்

19 December 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள் >> முன்னோட்டம்

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து மாபெரும் பொருட்ச்செலவில் தயாரித்து, இயக்கி வரும் படம் "முப்பொழுதும் உன் கற்பனைகள்".

இப்படத்தின் ஹீரோவாக அதர்வாவும், ஹீரோயினாக அமலா பாலும் நடித்துள்ளனர். படத்தில் அதர்வா முழுக்க முழுக்க கற்பனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் வருகிறாராம். இவருடைய கற்பனையில் வரும் காதலியாக அமலா பால் நடித்துள்ளார். கற்பனையில் சந்தித்த அமலா பாலை, அதர்வா நிஜமாகவே நேரில் பார்த்தால் என்ன நடக்கும்? என்பதைத்தான் வித்தியாசமான முறையில், ‌பெரும் பொருட்ச்செலவில் பாடமாக்கி வருகிறார் எல்ரெட் குமார்.

படத்தின் பாடல்கள் அனைத்தையும் தாமரையே எழுதியுள்ளார். அதிலும் இவர் எழுதிய ஒரு தாலாட்டு பாடல் ரொம்பவே பேசப்படுமாம். படத்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, இசையும் அற்புதமாக அமைத்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. 2012ம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.

மதுரையில் மார்கழி தமிழிசைத் திருவிழா

மதுரை: மதுரையில் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில், மார்கழி தமிழசைத் திருவிழா நடந்தது. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், தமிழிசை மூவர் பாடல்கள் பாடப்பட்டன. திருமுறை இசையை குமரகுருபரன் பாடினார். செல்வி மானஷா மற்றும் அனுப்ரியா, திவ்யா சகோதரிகளின் தமிழிசை நடந்தது. தேவார திருவாச இன்னிசையை சிவபிரசாத் நிகழ்த்தினார். பின், சங்கரநாராயணனின் வீணை இசை நடந்தது. அவந்திராஜ் தமிழிசை பாடல்களை பாடினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு, தேவார திருமுறை நூல்கள், சனிபகவான் தல தேவாரப்பதிக நூல்களை, தருமபுர ஆதீனப் புலவர் குருசாமி வழங்கினார். ஏற்பாடுகளை மிருதங்கம் இசைக் கலைஞர் தியாகராஜன், சுரேஷ் சிவன், இளங்கோவன், சரவணன், சுப்பிரமணியசாமி, அய்யனார் செய்தனர். 

17 December 2011

சென்னை பட விழாவில் இன்று என்ன படம் பார்க்கலாம்

உட்லண்ட்ஸ்

10.15 AM

SLEEPING SICKNESS (2011/ ஜெர்மெனி/ 91 நி)
இயக்குனர்: Ulrich Kohler'

கேமரூனில் 'ஸ்லீப் சிக்னஸ்' நலத் திட்டத்தின் மேலாளராக கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறார், Eddo Velten. அவரது மனைவி Vera ஜெர்மெனியில் உள்ள தனது சொந்த கிராமத்திலேயே மீண்டும் செட்டில் ஆகிவிடலாம் என்கிறாள். அவளது விருப்பப்படி செய்வதற்கு Ebboவுக்கும் ஆசை. ஆனால், அந்த விருப்பத்தை தவிர்ப்பது என தீர்மானிக்கிறான். அதன் தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சில நிகழ்வுகள். சொந்த வாழ்க்கையிலும் சமூகச் சூழலிலும் மாற்றங்கள். சர்வதேச அரசியலையும், தனி மனித உணர்வுகளையும் மிகச் சிறப்பாக பதிவு செய்த படம் இது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளின் உதவி பெறும் ஆப்பிரிக்காவின் நிலையை அறிவுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

61st Berlin International Film Festival-ல் இப்படத்துக்காக, Silver Bear for Best Director விருதை இயக்குனர் Köhler வென்றதே இப்படத்தின் சிறப்பைச் சொல்லும்.

*

12.30 PM

17 GIRLS (2011/ பிரான்ஸ்/ 90 நி)
இயக்குனர் : Delphine Coulin

கடற்கரையை ஒட்டிய ஒரு சிறு நகரம். ஒரே பள்ளியில் படிக்கும் 17 டீன் ஏஜ் பெண்கள் எவருமே யோசிக்காத வித்தியாசமான திட்டத்தை அரங்கேற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைவது தான் அந்தத் திட்டம். பிறகு சொல்ல வேண்டுமா என்ன..? - இது, 2008-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்!

*

3.00 PM

SLEEPING BEAUTY (2011/ ஆஸ்திரேலியா/ 104 நி)
இயக்கம் : Julia Leigh

யூனிவர்சிட்டியில் பயிலும் லூஸி, தன் படிப்புக்கு தேவைப்படும் பணத்துக்காக செய்யும் அசாதாரணமான வேலைகளும், அதனால் அவள் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் சொல்கிறது இப்படம். 'மிதமிஞ்சிய காமம் சார்ந்தது' என்ற அடைமொழியுடன் பல்வேறு படவிழாக்களில் வலம் வந்த படம் இது.

*

5.00 PM

A SEPARATION (2011/ ஈரான்/ 120 நி)
இயக்குனர் : Asghar Farhadi

Nader-ஐ விட்டுப் பிரிந்து செல்கிறாள் மனைவி. தனது வயதான தந்தையை கவனிக்க, இளம் பெண் ஒருத்தியை வீட்டு வேலைக்குச் சேர்க்கிறான், Nader. அந்தப் பெண் ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல; மனஉறுதியில்லாத தனது கணவரின் அனுமதியின்றி பணியாற்றுகிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. அதைத் தொடர்ந்து எழும் பொய்கள், சிக்கல்கள், போராட்டங்கள் சொல்லி மாளாது.

61st Berlin International Film Festival-ல் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகருக்கான Golden Bear விருதுகளை அள்ளியது. கோல்டன் பியர் விருது பெற்ற முதல் ஈரானியப் படம் என்பது சிறப்பு. அத்துடன், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில், ஈரானில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம் என்பதும் இப்படத்தை தவறாமல் பார்க்கத் தூண்டும் அம்சம்.

*

8.00 PM

I MISS YOU (2011/ ஸ்வீடன்/ 125 நி)
இயக்குனர் : Anders Gronros

Tinaவும் Cillaவும் இரட்டைச் சகோதரிகள். தெற்கு ஸ்வீடனில் உள்ள 15 வயது சிறுமிகள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தைக் கொண்டிருப்பவர்கள். ஆனால், வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். ஒருநாள் பள்ளிச் செல்லும்போது, Cilla கார் விபத்தில் மரணம் அடைகிறாள். இதனால், தனித்தவளாகிவிடும் Tina தனது வாழ்க்கையைச் சமநிலைப்படுத்த முடியாமல் சகோதரியின்றி தவிக்கிறாள். இரட்டைப் பிறவிகள் பற்றிய வந்த படைப்புகளில் தனித்துவம் கொண்டது இப்படம்.

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10.30 AM

HAWY (2010)/ எகிப்து/ 112 நி)
இயக்குனர் : Ibrahim El-Batout

5 ஆண்டுகால தனிமைச் சிறைக்குப் பிறகு விடுதலை செய்யப்படுகிறார், 40 வயது Youssef. பல நாட்களாக தன்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் வெளியேறுகிறார். Alexandria செல்லும் அவர், Ibrahim and Fady ஆகியோரைச் சந்திக்கிறார். அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பாக Youssef உடன் சிறையில் உடன் இருந்தவர்கள். இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் அடுத்தகட்ட நிலை என்ன? Alexandriaவின் எழில், Youssefக்கு வாழ்வதற்கான வேட்கையை ஏற்படுத்துகிறதா இல்லையா?

*

12.45 PM

PAKARNATTAM (2011/ மலையாளம்/ 95 நி)
இயக்குனர் : ஜெயராஜ்

பையனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்ட PAKARNATTAM, அந்தப் பகுதி அரசியல் வன்முறைக்கு ஆளாவது பற்றி அலசுகிறது. சமகால அரசியலையும், அரசியல் பழிதீர்த்தலையும் சொல்லும் இப்படம், எண்டோசல்பான் பூச்சிக் கொல்லியால் ஏற்பட்ட பாதிப்புகள், அதன் தொடர்ச்சியான போராட்டங்களை கதையினூடே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்தியாவில் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய பட விழாக்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

*

5.45 PM

KARMAYOKI (2011/ மலையாளம்/ 118
இயக்குனர் : வி.கே.பிரகாஷ்

ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' நாடகத்தைத் தழுவி எடுத்தப் படம். Chathothu குடும்ப சந்ததியின் ஒரே ஆண்பிள்ளையான Rudran Gurukkal பற்றிய கதை. கடவுள் சிவன் பிறந்ததாக நம்பப்படும் யோகி சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சொல்லும் இந்தப் படம், Rudran அசாதாரண சிக்கல்களை திரைக்கதையாக காண்பித்துள்ளது. இந்தியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற படம் இது.

*

8.00 PM

DAUGHTER OF THE NILE (1987/ தைவான்/ 91 நி)
இயக்குனர் : Hsiao-hsien Hou

கடுமையான புற வாழ்க்கையின் யதார்த்தத்தில் இருந்து, தனக்குப் பிடித்த காமிக் புத்தகமான Daughter of the Nile மூலம் தன்னை விடுவித்துக்கொள்கிறாள், பள்ளி மாணவி ஒருத்தி. சலனத்தன்மை மிக்க இயல்பு மிகுந்திருந்த போதிலும், தைவானின் வாழ்க்கை முறையின் தன்மையை சொல்லியிருக்கும் படம் இது.

***

ஃபிலிம் சேம்பர்

10.00 AM

LULL (2010/ ஹங்கேரி/ 91 நி)
இயக்குனர்: Tamos Sas

ஒரு படகில் பயணம் செல்லும் மூன்று பெண்களைப் பற்றிய கதை. ஒரு கோடை தினத்தில் ஜாலியாக வலம்வரச் செல்கிறார்கள் அந்தப் பெண்கள். ஆனால், அது மறக்க முடியாத கறுப்புப் பயணமாக அமைகிறது. வெளிக்கொணரப்படும் ரகசியங்கள், வெடித்து வெளியேறும் உணர்வுகள் என அந்த மூன்று பெண்களுக்கு நேரும் அனுபவங்களே LULL.

*

12.30 PM

தெய்வத் திருமகள் (2011/ தமிழ்/ 155 நி)
இயக்குனர் : விஜய்

ஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும்?
மன வளர்ச்சி குன்றிய விக்ரமுக்கு பெண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார் அவரது மனைவி. மனதளவில் குழந்தையாக இருக்கும் விக்ரமே, அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டிய சூழல். மகள் சாராவே (அறிமுகம்) உலகம் என்று விக்ரம் வாழ, 'ஃப்ரெண்ட்லி’ அப்பாவுடன் சந்தோஷமாக வளர்கிறாள் சாரா.

3.30 PM

எங்கேயும் எப்போதும் (2011/ தமிழ்/ 135 நி)
இயக்குனர் : எம்.சரவணன்

காதலும் விபத்தும் 'எங்கேயும் எப்போ தும்’ நிகழலாம்!
எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக் கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்!
*

6.30 PM

LATE BLOOMERS (2011/ பிரான்ஸ்/ பெல்ஜியம்/ 90 நி)
இயக்குனர் : Julie Gavras

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை. ஒரு தருணத்தில், சில காலம் பிரிய முடிவு செய்கிறது அந்த ஜோடி. பிற்காலத்தில் ஒன்று சேரலாம் என்பதே இதன் நோக்கம். மேரி - ஆடம் என்ற ஜோடி, நீங்கள் நினைப்பது போல் 20, 30 வயதுள்ள இளம் ஜோடி அல்ல. அவர்கள் 60 வயது ஜோடி. பிறகு..? 21-ம் நூற்றாண்டின் வயோதிகர்களின் மனநிலையைச் சொல்லும் படம் இது.
ஸ்டூடியோ - 5

10AM

A SUMMER AT GRANDPA'S 1986 / தைவான்/ 93 நி
இயக்குனர் : Hsiao-hsien Hou

தாய்க்கு உடல்நலம் சரியாக இல்லாததால், தாத்தா வீட்டுக்கு போகிறார்கள் ஒரு சிறுவனும் அவனது சகோதரியும். அங்கு, மரங்கள் மீது ஏறி விளையாடுதல், நீச்சல் அடித்தல் போன்ற அனுபவங்களோடு பதின்பருவத்தில் புதிதான அனுபவங்களும் அவனை எப்படி பாதிக்கிறது என்பதை சொல்கிறது இப்படம்.

Locarno-வில் ஜூரி விருதும் Nantes Three Continents விழாவில் Golden Montgolfiere விருதும் வென்றது இப்படம்.

*

12.15 PM

THE MONK / ஸ்பெயின் - பிரான்ஸ் / 2011 / 101 நி
இயக்குனர் : Dominik Moll

பெரிதும் மதிக்கப்படும் துறவியை தடுமாற வைக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவுகளையும் சொல்லும் படம் இது. பெண் துறவி வேடம் பூண்டு துறவியிடம் மாணவியாக இருக்கும் மெடில்டா, மெல்ல மெல்ல துறவிக்கு ஆசை மூட்டி, அவரது புலனடக்கதை இழக்க வைக்கிறாள். ஆசை கொண்ட துறவி, அந்தோனியா என்னும் மற்றொரு மாணவி / சிஷ்யை மீதும் தன் கவனத்தை திருப்புகிறார்.

துறவி அந்தோனியாவை அடைய மெடில்டா உதவுகிறாள். காமம் கண்ணை மறைக்க, துறவி அந்தோனியாவை நாசப்படுத்தி கொன்று விடுகிறார். சாத்தானின் பிடியில் சிக்கியிருக்கும் துறவிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை விவரிக்கிறது THE MONK.

5.15 PM
GHOSTED / UK / 2011 / 102 நி
இயக்குனர் : Craig Viverios

சிறையில் தன் வேலைகளை சரிவரச் செய்து கொண்டு தன் தண்டனைக் காலத்தை கழிக்கிறான் ஜாக். ஜாக்'கின் மனைவி அவனை விட்டு விலகப் போவதாக சொல்ல, மனம் தடுமாறுகிறான். மனக்குழப்பத்தில் இருக்கும் ஜாக்'கிற்கு ஆறுதலாக அவனது நண்பன் அகமது இருக்கிறான். பால் என்னும் புதிய கைதி உள்ளே வர, ஜாக் அவன் மீது பாசத்தோடு இருக்கிறான்.

க்ளே என்னும் தீயவனின் பிடியில் பால் சிக்க, அவனை காப்பாற்ற ஜாக் எடுக்கும் முயற்சிகளையும் அதன் விளைவுகளையும் விவரிக்கிறது இப்படம்.

7.30 PM
PURE (2010 / ஸ்வீடன் / 97நி)
இயக்குனர் : Lisa Langseth

பள்ளிப்படிப்பை முடித்திராத கேதரீனா, எந்த வேலையிலும் நிலைத்திருக்க முடிவதில்லை. தன் தாயைப் போல தானும் ஆகிவிடுவோமோ என்று மன வருத்தத்தில் இருக்கிறாள். ஒரு நாள் தற்செயலாக யூடியூப் வீடியோவில் இசைக் கலைஞர் மோசார்ட்டின் இசையைக் கேட்டு மயங்கிப் போகிறாள். அந்த இசையினால் அவளது வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதை சொல்கிறது இப்படம்.

தன் நண்பனை, தாயை, தோழிகளை விட்டு விலகி, ஒரு இசை அரங்கில் வேலைக்கு சேர்கிறாள். அங்கு தன்னை விட மூத்தவரான இசைக் கோர்ப்பாளருடன் தொடர்பு கொள்கிறாள். கேதரீனா வாழ்வில் தான் தேடியதை அடைந்தாளா, அவளது மனம் ஏங்குவது எதற்காக என்பதை விவரிக்கிறது PURE.
__________________________

INOX 

10 AM
CALAMARI UNION / FINLAND / 1985 / 80 நி

வாழும் ஊரில் தாம் நடத்தப்படும் விதம் பிடிக்காமல், மற்றொரு ஊருக்கு செல்ல திட்டமிடுகிறது ஒரு குழு. அவர்களோடு மற்றொருவனும் சேர்ந்து கொள்ள, எல்லோரும் போகும் ஊரில் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்தோடு பயணிக்கின்றனர். வழியில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், அதனை அவர்கள் சமாளிக்கும் முறைகள் என விரிகிறது திரைக்கதை. அவர்கள் எல்லாரும் புதிய இடத்தை சென்றடைந்தார்களா, அவர்கள் நினைத்தபடி தான் அந்த ஊர் இருந்ததா என்பதை சொல்கிறது இப்படம்.

12.15 PM
MICROPHONE / EGYPT / 2010 / 120 நி
இயக்குனர் : Aahmad Abdalla

பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்புகிறான் காலித். தன் தன் பழைய காதலியைத் தேடிப் போக, அவளோ வேறு இடத்திற்கு குடிபோகப் போவதாக சொல்லிச் சென்று விடுகிறாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக தனக்கும் தன் தந்தைக்குமான உறவிலும் விரிந்திருக்கும் மன விரிசலை உணர்ந்து துவண்டு போகிறான் காலித்.

வாழ்க்கையில் பிடிப்புப் போக, தெருக்களில் சுற்றி வரும் காலித்துக்கு தற்செயலாக நிகழும் சம்பவங்கள், அவனது வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றன.

அக்டோபர் 2010 Carthage film festival-ல் The Golden Tanit விருது உட்பட பல்வேறு விருதுகளை அள்ளியது இப்படம்.

4.30 PM
THE FRONT LINE / கொரியா / 2011 / 133 நி
இயக்குனர் : Hun Jang

கொரியாவில் நடந்த யுத்தத்தின் முடிவில் ஒரு தென் கொரிய ராணுவ கமாண்டர் கொல்லப்பட, அது குறித்து விசாரிக்க போகிறார் ராணுவ உயரதிகாரி Kang Eun-Pyo.

விசாரிக்கப் போன் இடத்தில், இறந்து விட்டதாக கருதப்பட்ட தனது பழைய நண்பன் Kim Soo-Hyeok-ஐ பார்க்கிறார். சிறு வயதில் பார்த்த Kim Soo-Hyeok மாறிப்போய் இப்போது ஒரு படைக்கு தலைமை தாங்கி நடத்துவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும் போராட்டங்களையும் விவரிக்கிறது இப்படம்.

2011-ல் நான்கு Grand Bell விருதுகளை வென்றது THE FRONT LINE.
நன்றி : விகடன் 

16 December 2011

'டேம் 999' பட இயக்குனருக்கு கே ஆர் நாராயணன் புரஸ்காரம் விருது!

புதுடெல்லி: தமிழகம் மற்றும் கேரளா என இரு மாநிலங்களிடையே சிறிய பிரச்னையாக இருந்த முல்லை பெரியாறு அணை விவகாரத்தை, தனது படத்தின் மூலம் 

மிகப்ªபரிய மற்றும் பூதாகரமான பிரச்னையாக உருவெடுக்க காரணமாக இருந்த டேம் 999 பட இயக்குனர் சோகன் ராய், இந்த ஆண்டின் கே ஆர் நாராயணன்

புரஸ்காரம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வழங்கம் நிதியின் மூலம் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த நிதியத்தின் தலைவர் உழவூர் விஜயன் தெரிவிக்கையில், முல்லை பெரியார் அணை உடைவதன் மூலம் 

கேரள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நேரில் பார்த்தது போன்று இருந்தது அப்படம். 

இப்படத்தின் மூலம் மாநில மக்களுக்கு உரிய நேரத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தங்களுடைய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு 

ஆண்டுதோறும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், சோகன் ராய்க்கு இவ்விருது வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.